தீவிரவாத மிரட்டல்-தமிழக போலீசாருடன் சிதம்பரம் ஆலோசனை
சென்னை: தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லஸ்கர் தீவிரவாதி சயீத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து உளவுத்துறை தென் இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதை தொடார்ந்து லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி முகம்மது உமர் மத்னியை டெல்லியில் கைது செய்தனர். அவன் சென்னையில் பல இளைஞர்களை தேர்வு செய்து தீவிரவாத பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தான்.
இதையடுத்து தமிழக டிஜிபி ஜெயின், சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு டிஜிபி ராதாகிருஷ்ணன், உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடம் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருவல்லிக்கேணியில் நடந்த போக்குவரத்து போலீசாருக்கான உடல் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் கூறுகையில்,
சென்னைக்கு அதிக வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் குறித்த பட்டியலை ஹோட்டல்களில் கேட்டுள்ளோம். அனைத்து ஹோட்டல்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் வங்கதேசத்தினர் அதிகம் இருக்கின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக தீவிரவாத மிரட்டல் இருப்பதாக அடிக்கடி எச்சரிக்கப்பட்டு வருகிறோம். சென்னை நகரில் பாதுகாப்பு எப்போதும் தீவிரமாகத்தான் உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும், வணிக வளாகங்களிலும், கோவில்களிலும், பஸ், ரெயில் நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தமிழகத்துக்கு எந்த தீவிரவாத மிரட்டலும் இல்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து இடங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர் என்றார் ராஜேந்திரன்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications