அழகர்கோவிலில் கொள்ளை முயற்சி-போலீஸ் விசாரணை
மதுரை: அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் கோவிலுக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று நகைகளை கொள்ளையடிக்க முயன்றது. ஆனால் காவலாளி வந்ததை அடுத்து அவர்கள் நகைகளை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் அழகர்கோவிலும் ஒன்று. கள்ளழகர் திருக்கோவில் இடம்பெற்றுள்ளதால் அழகர்கோவில் என்று அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.
இவர்கள் வெள்ளி, தங்க நகைகளையும், பணங்களையும் காணிக்கையாக அளிக்கின்றனர். இந்த காணிக்கைகள் மாதம் ஒரு முறை எண்ணப்படுகிறது. தங்க நகைகள் கோயிலில் இருக்கும் லாக்கர் ஒன்றிலும், வெள்ளி பொருட்கள் மூலஸ்தானத்துக்கு அருகில் உள்ள ஒரு அறையில் இருக்கும் சூட்கேசிலும் வைக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்து கொண்ட மர்ம கும்பல் ஒன்று இன்று அதிகாலை 3 மணிக்கு கோவிலுக்குள் புகுந்து நகைகளை திருட முயன்றது. லாக்கரை உடைக்க முடியாமல் போகவே அங்கிருந்த வெள்ளி பொருட்களை வாரியிறைத்து கொண்டு கிளம்பியது.
அப்போது அங்க வந்த காவலாளி பாஸ்கர் கொள்ளையர்களை கண்டதும் அவர்களை பிடிக்க ஓடினர். காவலாளியை கண்ட கொள்ளையர்கள் நகைகளை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து காவலாளி பாஸ்கரன் ஊமச்சிகுளம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மோப்ப நாய், கைரேகை நிபுணர் சகிதம் வந்து துப்பு துலக்கி வருகின்றனர்.
சமீபத்தில்தான் சென்னையில் உள்ள ஜெயின் கோவிலில் வாட்ச்மேனைக் கொன்று தங்க அங்கி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிலையில் அழகர்கோவிலில் நடந்துள்ள இந்த துணிகர திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications