சென்னையில் வாலிபர் கொடூரமாக வெட்டிக் கொலை
சென்னை: சென்னையில் வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது.
சென்னை சூளையில் உள்ள நடராஜா தியேட்டர் அருகில் இருக்கும் சட்டண்ணன் தெருவில் இன்று அதிகாலை, ஒரு பாலிதீன் பையில் துண்டிக்கப்பட்ட 2 கைகள் தனியாக கிடந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்தப் பையை மீட்டனர்.
அதில் இரு கைகள் மட்டும் கிடந்தன இடது கையில், செம்பினால் ஆன மோதிரம் உள்ளது. வலது கையில் சிவப்பு நிற கயிறு கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யானைகவுனி போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. போனில் பேசிய ஒருவர், காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள வெங்கட்ராமன் தெருவில் ஒரு பார்சல் கிடப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அந்த பார்சலைக் கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில்,
இடுப்புக்கு கீழ் துண்டிக்கப்பட்ட ஒரு ஜோடி கால்கள் மட்டும் மடக்கிய நிலையில் இருந்தது.
ஏற்கனவே சிக்கிய கைகளுக்குரிய நபரின் கால்கள்தான் இவை என்று போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இந்த நிலையில், என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் கிருஷ்ணப்பா மேஸ்திரி தெருவில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரின் அருகில் ஒரு சணல் பை அனாதையாக கிடப்பதாக தகவல் வந்தது.
போலீஸார் அந்த பையை மீட்டுப் பார்த்தபோது தலையில்லாத ஒரு உடல் மட்டும் கிடந்தது. இடுப்புக்கு மேல் உள்ள பகுதி அது.
இந்த மூன்று பாகங்களுமே ஒரே நபரின் உடலுக்குரியவை என்று தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்டவர் இளைஞர் என்று தெரிகிறது.
தலையை போலீஸார் தேடி வருகின்றனர். கொடூரமாக கொல்லப்பட்ட இந்த நபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications