எல்டிடிஇ தடையை நீக்குங்கள்: ஒபாமாவுக்கு தமிழர்கள் கோரிக்கை
வாஷிங்டன்: விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது செயலிழந்து விட்டது. அந்த அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசே கூறி விட்டது. எனவே, அமெரிக்காவும் ஏனைய மேற்குலக அரசுகளும் விடுதலைப் புலிகளை தமது பயங்கரவாதப் பட்டியல்களில் இருந்து நீக்க வேண்டும் என 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், அதிபர் ஒபாமா மற்றும் காங்கிரஸ், செனட் சபை உறுப்பினர்களுக்கு இதுதொடர்பாக அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவை என்ற பெயரில் - தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற மக்களுக்கு உதவி செய்யும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் கூட சில நாடுகளில் பயங்கரவாதப் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், போரினால் பாதிப்படைந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவி செய்ய கூட முடியாமல் இருக்கின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது செயலற்று போய் விட்டதால், அவர்களுடன் தொடர்புடையவை என கூறப்பட்ட இவ்வாறான தொண்டு நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்பட்டு போரினால் பாதிப்படைந்துள்ள மக்களுக்குச் சுதந்திரமாகத் தொண்டாற்ற அவை அனுமதிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 'ஒபாமாவிற்கான தமிழர்கள்' அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதும், தமிழ் தொண்டு நிறுவனங்களின் மீதும் அமெரிக்காவில் உள்ள தடை நீக்கப்படும் போது - ஏனைய நாடுகளும் அதனைப் பின்பற்றி செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications