டிசிஎஸ் டாப் நிர்வாகிகளுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பள உயர்வு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனது முதல் நிலை நிர்வாகிகள் மற்றும் இயக்குநர் வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பள உயர்வு வழங்கியுள்ளது டிசிஎஸ் நிறுவனம்.

நிறுவனத்தின் முதல் நிலை நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் தலா ரூ.1 கோடி மற்றும் அதற்கு அதிகமான உயர்வை இன்று டிசிஎஸ் அறிவித்துள்ளது.

இப்போதைய சிஇஓவாக இருக்கும் ராமதுரைக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.4.1 கோடி சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. இதற்கு முன் இவர் ரூ.3.37 கோடி பெற்று வந்தார். இவருக்கு 22 சதவிகிதம் சம்பள உயர்வு தந்துள்ளது நிர்வாகம்.

ஆனால் நிறுவனத்தின் சிஓஓவாக உள்ள சந்திரசேகரனுக்கு 36 சதவிகிதம் சம்பள உயர்வை அறிவித்துள்ளது டிசிஎஸ். இவர்தான் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ பணிக்கு வரப்போகிறவர்.

டிசிஎஸ் செயல் இயக்குநர் பிரோஸ் வென்ரேவாலாவுக்குதான் அதிக அளவு சம்பள உயர்வு தரப்பட்டுள்ளது. இவர் 41 சதவிகிதம் சம்பளம் கூடுதலாகப் பெறுவார்.

டிசிஎஸ்ஸின் செயலற்ற தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் அதன் நிறுவனர் ரத்தன் டாடாவுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் எந்த மாறுதலும் இல்லை. இயக்குநர் குழுக் கூட்டங்களில் பங்கேற்ற வழங்கப்படும் தொகை உள்பட ரத்தன் டாடாவுக்கு ரூ.55 லட்சம் சம்பளமாகத் தரப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+