எதிர்கட்சிகள் பேச்சை காது கொடுத்து கேளுங்கள்-அதிமுக
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியின்ர எதிர்கட்சிகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும் என அதிமுக எம்.பி செம்மலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவி்க்கும் தீர்மானத்தின் போது சேலம் அதிமுக எம்.பி. செம்மலை பேசுகையில்,
பேரறிஞர் அண்ணா சொன்னதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 'நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அதனை கேட்க ஆளுங்கட்சியினர் தங்கள் காதுகளை திறந்து வைத்திருக்க வேண்டும்' என்றார் அண்ணா.
இதற்கு பொருள் என்னவென்றால் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப உரிய முறையில் ஆளுங்கட்சியினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான்.
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா சர்வதேச, தேசிய, மாநில மற்றும் உள்ளூர் பிரச்சனைகளில் ஆழமான அறிவும், அனுபவமும் கொண்டவர். எனவே பல்வேறு முக்கிய தேசிய பிரச்சனைகளில் அவரது கருத்துக்களை கேட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெயலலிதா கூறியுள்ளபடி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்த வேண்டும். அத்துடன் இத்திட்டத்தில் பணிபுரியும் ஆண் அல்லது பெண் ஊழியருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 100 ஊதியம் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றார் செம்மலை.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications