சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதிகாரிகளுக்கு கருணாநிதி உத்தரவு

முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் நேற்று மாலை அவசர கூட்டம் கூட்டபப்ட்டது. மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து இதில் ஆய்வு நடத்தப்பட்டது.
தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உள்துறை முதன்மை செயலாளர் எஸ்.மாலதி, டி.ஜி.பி. கே.பி.ஜெயின், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அனுப் ஜெயிஸ்வால், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம், உளவுப்பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முக்கியமான குற்றங்கள் பற்றிய விவரங்களையும், அவை தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பல்வேறு போலீஸ் பிரிவுகளில் கையாளப்படும் முக்கிய வழக்குகள் பற்றிய விவரங்களையும் கேட்டறிந்தார்.
தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அண்மையில் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை தகவல் அனுப்பியது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விவரமாக கேட்டார்.
மேலும் பல்வேறு பிரச்சினைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு உரிய ஆணை முதல்வரால் பிறப்பிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் இந்த கூட்டத்தில் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications