ஆரணி ஏரியில் மனித எலும்புகூடு- விசாரணை
ஆரணி: ஆரணி அருகே ஏரி ஒன்றில் மனித எலும்புக் கூடு கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி அருகே தேவிகாபுரம் சாலையில் உள்ளது திருமலை சமுத்திரம் ஏரி. இந்த ஏரியில் மழை காலத்தில் நீர் வரத்து அதிக அளவில் இருக்கும். ஆனால் கோடை காலத்தில் நீரின்றி ஏரி வறண்டு கிடக்கும்.
இந்த நிலையிஸ், ஏரியின் மையப் பகுதியில் மனித எலும்பு கூடு கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இத் தகவல் காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் திரண்டு வந்தனர். இது குறித்து ஆரணி நகர கிழக்கு பிரிவு விஏஓ தட்சிணாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், வேலூரில் இருந்து தடய அறிவியல் நிபுணர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் ஏரியில் கிடந்த மண்டை ஓடு, கால், கை, மார்பு எலும்புகள் ஆகியவற்றை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கிண்டிக்கு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையில் கடந்த மாதம் 20ம் தேதி ஆரணி வடியராஜா தெருவை சேர்ந்த லட்சுமி (45) என்பவரின் கணவர் வெங்கடேசன் காணாமல் போனதாக கூறப்படுகிறத. இந்த எலும்புக் கூடு அவருடையதுதானா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications