இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்

வங்கி ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1993ல் எம். கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கித் தலைவராக இருந்தபோது, மும்பையைச் சேர்ந்த பிஜே என்ற பைப் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 8.86 கோடியை மும்பை கிளை மூலம் வழங்கப்பட்டது. இந்த கடன் தொகையை வழங்குவதற்கு அவர் எந்த ஆவணமும் வழங்கவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து சிபிஐ, கோபாலகிருஷ்ணன் மற்றும் அப்போதைய மும்பை கிளையின் மேலாளர் சண்முகசுந்தரம் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரங்கராஜன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி, கோபாலகிருஷ்ணனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.70 லட்சம் அபராதமும் விதித்தார். சண்முகசுந்தரத்துக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.80 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில்,
இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. கோபாலகிருஷ்ணன் ரூ.2 லட்சத்தையும், சண்முகசுந்தரம் ரூ.2.25 லட்சத்தையும் சிபிஐ நீதிமன்றத்தில் வைப்பு தொகையாக வைக்க வேண்டும்.
மேலும் அவர்கள் இருவரும் தலா ரூ.1 லட்சம் கொடுத்து சொந்த ஜாமீன் பெறலாம். ஜாமீனில் வெளிவந்த பிறகு சம்பந்தப்பட்ட சிபிஐ நீதிமன்றத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று ஆஜராக வேண்டும். முகவரி மாற்றம் செய்தால் அதனை உடனடியாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications