சென்னையில் கடல் அரிப்பு மூழ்கும் சர்ச்!
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பு மற்றும் கடல் சீற்றம் காரணமாக அங்குள்ள சீனிவாசபுரத்தில் கட்டப்பட்ட ஒரு சர்ச் கடலில் மூழ்கி விடும் அபாய நிலையில் உள்ளது.
சீனிவாசபுரத்தில் கடலோரம் இயேசு கிறிஸ்து சர்ச் என்ற தேவாலயம் உள்ளது. அங்குள்ள மீனவ மக்கள் இதைக் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக கடல் நீர் உள்ளே புகுந்து, மண் அரிப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் சர்ச் பாதி அளவுக்கு சாய்ந்து விட்டது.
படிப்படியாக அது கடலில் மூழ்கும் நிலைக்குப் போய்க் கொண்டுள்ளது.
இந்த சர்ச் கடந்த 14 வருடங்களாக இங்கு இருந்து வருகிறது. இங்கு சர்ச் கட்டப்பட்டபோது கடல் 1000 அடி தூரத்திற்கு இருந்ததாம். ஆனால் கடந்த ஒரு மாதமாக கடல் நீர் சர்ச்சைத் தாண்டி வந்து விட்டதாம்.
சர்ச் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வேறு இடத்திற்கு சர்ச்சை மாற்ற வேண்டும், இல்லாவிட்டால் இது கடலில் மூழ்கி விடும் என இந்த சர்ச்சின் பாதிரியாரான ஜெரால்டு கூறினார்.
இந்த சர்ச் தவிர அக்கம் பக்கத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவையும் கூட கடல் மண் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications