தூத்துக்குடி: திமுக எம்பி பேனர் கிழிப்பு-ஒருவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் வைக்கப்பட்டிருந்து திமுக எம்.பி. ஜெயதுரையின் பேனர் கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயதுரை. நாடாளுமன்ற கூட்ட தொடரில் கலந்து கொண்ட அவர் நேற்று விமானம் முலம் தூத்துக்குடிக்கு வந்தார். இதையடுத்து நகர் முழுவதும் அவரை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மூன்றாம் மைல், மையவாடி சந்திப்பு உள்பட 5 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் திமுக எம்.பி. ஜெயதுரையின் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் எம்பியின் ஆதரவாளர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஏரல் அருகே உள்ள மங்கலக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஆபிரகாம் குருஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த இரண்டு நபர்கள் போலீசை பார்த்ததும் பைக்கில் தப்பிக்க முயன்றனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றொருவன் ஓடிவிட்டான். விசாரணையில் பிடிபட்டவன் தாமோதரன் நகரை சேர்ந்த சவுந்திரபாண்டி மகன் பாலமுருகன் என்ற பால்ராஜ் என்பது தெரியவந்தது.
அவருடன் வந்த ராஜுவ் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 5 இடங்களில் சேதப்படுத்தப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications