சென்னையில் லோட்டேயின் பிரமாண்ட சாக்லேட் தொழிற்சாலை

சென்னை திருமழிசைக்கு அருகே உள்ள நேமம் கிராமத்தில் இந்த நிறுவனம் அமைகிறது. ஏற்கெனவே இதன் பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
1967-ல் கொரியாவில் துவங்கப்பட்டது லோட்டே கன்பெக்ஷனரி. 6000 பணியாளர்களுடன் இயங்கும் இந்நிறுவனம் ஆண்டுக்கு 900 மில்லியன் டாலர் விற்பனை செய்கிறது. சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் இந்நிறுவனத்துக்கு தொழிற்சாலைகளும் கிளை அலுவலகங்களும் உள்ளன.
2004-ல் முருகப்பா குழுமத்தின் பாரி கன்பெக்ஷனரியை வாங்கியதன் மூலம் இந்தியாவில் அடியெடுத்து வைத்தது லோட்டே.
32 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்நிறுவனம், சூயிங்கம், ஸ்பியர்மின்ட், சாக்லேட்டுகள், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள், ஐஸ்க்ரீம், லோட்டே ப்ரஷ் மின்ட், பிஸ்கட்டுகள், மருந்துப் பொருட்கள் என ஏராளமானவற்றை உற்பத்தி செய்கிறது.
ஏற்கெனவே ஹுண்டாய், வாஷின், மாண்டோ, இல்ஜின் உள்ளிட்ட 50 கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் வலுவாக கால்பதித்துள்ளன. இப்போது இந்த நிறுவனங்களுடன் லோட்டேவும் இணைகிறது. 2010-ல் முழு வீச்சில் உற்பத்தியைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்நிறுவனம், வேறு சில துறைகளிலும் ஆர்வம் காட்டுகிறது. குளிர்பான உற்பத்தி, சுற்றுலா வளர்ச்சி, ஓட்டல்கள் போன்றவற்றில் முதலீடு செய்யவும் இந்நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications