ஏழுமலையானுக்கு ரூ. 45 கோடி வைர கிரீடம்-கர்நாடகா அமைச்சர் வழங்கினார்

சுரங்க தொழிலதிபரான கலி ஜனார்த்தன ரெட்டி கர்நாடக மாநிலத்தில் சுற்றுலா துறை அமைச்சராக இருக்கிறார். நேற்று முன்தினம் அவர் குடும்பத்தோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் ரூ. 45 கோடி மதிப்பு கொண்ட வைர கிரீடத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக கொடுத்தார்.
திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி வைர கிரீடத்தை பெற்றுக்கொண்டார். இதில் 4 ஆயிரம் காரட் எடை கொண்ட 70 ஆயிரம் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. சுமார் 32 கிகி., எடை கொண்ட சுத்தமான தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 2.5 அடி எடை கொண்ட இந்த வைரத்தின் நடுப்பகுதியில் சுமார் 890 காரட் எடைகொண்ட ஆப்ரிக்காவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மரகதம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ. 10 கோடியாகும்.
இந்த கிரீடம் இன்று காலை நடந்த அபிஷேகத்துக்கு பின்னர் ஏழுமலையானுக்கு சூடப்பட்டது. முன்னதாக இந்த கிரீடத்துக்கு திருமலையில் வைபோவவத்சவ மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்த கிரீடத்தை கோயம்புத்தூர் கீர்த்திலால் ஜூவல்லர்ஸ் நிறுவனம் 9 மாதத்தில் வடிவமைத்து கொடுத்துள்ளது. 16வது நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்கள் கொடுத்த காணிக்கைகளுக்கு பின்னர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய காணிக்கை இது தான்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications