வெல்டிங் குமார் அறையில் ரெய்டு - செல்போன், சிகரெட் பாக்கெட்கள், பிஸ்தா, பாதாம் பருப்பு பறிமுதல்
சென்னை: கொலை செய்யப்பட்ட ரவுடி வெல்டிங் குமார் தங்கியிருந்த அறையில், செல்போன், பிஸ்தா பருப்பு பாக்கெட்கள், பாதாம் பருப்பு பாக்கெட்கள், சிகரெட் பாக்கெட்கள் சிக்கியுள்ளன. அவற்றை பிற கைதிகளுக்கு அவர் விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட தனது சிறை அறைக்குள் பலசரக்குக் கடை ஒன்றையே நடத்தி வந்துள்ளார் ரவுடி குமார்.
மிகவும் அபாயகரமான ரவுடியான குமார், சிறைக்குள் தனக்கென தனி வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அட்டகாசம் செய்து வந்துள்ளார். இவருக்கு சிறை ஊழியர்கள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளதாக தெரிகிறது.
குமாருக்குக் கட்டுப்பட்டுத்தான் பிற கைதிகள் இருக்க வேண்டிய நிலையும் இருந்ததாம்.
அவரது அட்டகாசம் தாங்க முடியாம்தான் அன்பு தலைமையில் சில கைதிகள் தனிக் குழுவாக மாறி அவருக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்த 3 பேரால்தான் வெல்டிங் குமார் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று குமார் தங்கியிருந்த அறையை சிறை காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது அங்கு சில செல்போன்கள், பாதாம் பருப்பு பாக்கெட், பிஸ்தா பருப்பு பாக்கெட், சிகரெட் பாக்கெட் என நிறைய கிடைத்துள்ளன.
இவற்றையெல்லாம் அவர் கைதிகளுக்கு விற்று வந்துள்ளார். மேலும், செல்போன்களையும் கைதிகள் வெளியில் உள்ளவர்களிடம் பேச வாடகைக்கு விட்டு காசு பார்த்து வந்துள்ளார்.
இந்தப் பொருட்கள் எல்லாம் வெல்டிங் குமாரின் ஆட்கள் மூலம் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி சிறைக்குள் சப்ளை ஆகியுள்ளதாம்.
வெல்டிங் குமார் முன்பு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போதே அவரது அட்டகாசம் தாங்க முடியாமல் கொலை செய்ய முயற்சி நடந்தது. இதையடுத்து வெல்டிங் குமாரின் இரு மனைவியரும் அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் குமார்.
ஆனால் அன்பு ரூபத்தில் வெல்டிங் குமாரின் உயிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உடல் தகனம்..
இந்த நிலையில் வெல்டிங் குமாரின் உடல் நேற்று மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்ப்பட்டது. அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் உடலில் 20 குத்துக்கள் விழுந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவே மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி அவரது வீடு உள்ள கொருக்குப்பேட்டையில் ஆயுதப் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications