இலங்கை-சல்வார் கமீஸ் அணிந்து நாடாளுமன்றம் வந்த தமிழ் எம்.பி வெளியேற்றம்
கொழும்பு: இலங்கையில் சல்வார் கமீஸ் அணிந்து வந்த காரணத்துக்காக தமிழ் பெண் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் சார்பில் கிழக்கு மட்டக்களப்பு பகுதி எம்பியாக இருப்பவர் தங்கேஸ்வரி கதிராமன். இலங்கை நாடாளுமன்ற கூட்டத்துக்கு வந்த அவர் சல்வார் கமீஸ் அணிந்து வந்திருந்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள் கண்டிப்பாக சேலை தான் அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவு இருக்கிறது. முஸ்லிம் பெண் எம்.பிக்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு கொடுக்கப்ப்டடுள்ளது. இந்நிலையில் தங்கேஸ்வரி சல்வார் கமீஸ் அணிந்து வந்ததை அடு்தது அவர் பெண்களுக்கான உடை விதி மீறல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவர் இன்று முழுவதும் சபைக்குள் வரக்கூடாது என கூறப்பட்டது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த தங்கேஸ்வரி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இப்படி ஒரு உடை கட்டுபாடு இருப்பது எனக்கு இன்று தான் தெரியும். சமீபத்தில் வயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதால் சேலை அணிய முடியவில்லை. அதனால், தான் சல்வார் கமீஸ் அணிந்து வந்தேன் என்றார் அவர்.
3 தமிழ் எம்.பி.க்களுக்கு விடுமுறை கிடைத்தது...
இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்துக்கு வரமுடியாத காரணத்தை தெரிவித்து செல்வம் அடைக்கலநாதன், ஜெயனாந்த மூர்த்தி மற்றும் கஜேந்திரன் ஆகிய மூன்று தமிழ் எம்.பிக்களும் மருத்துவர்களின் சான்றிதழுடன் விடுமுறை கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இவர்கள் மூவரும் வெளி நாடுகளுக்கு சென்று நாட்டுக்கு எதிராக பேசுவதாக குற்றம்சாட்டி வரும் இலங்கை அவர்களுக்கு விடுமுறை கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென மனம்மாறிய இலங்கை நாடாளுமன்றம் அவர்களுக்கு விடுமுறை கொடுத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications