திருச்செந்தூர் அருகே காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின்
உடன்குடி: திருச்செந்தூர் அருகே காயத்துடன் டால்பின் கரை ஒதுங்கியது.
திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கடற்கரையில் நேற்று காலை 9 மணியளவில் டால்பின் குட்டி கரை ஒதுங்கியது.
6 அடி நீளமும், 150 கிலோ எடையும். கொண்ட இந்த டால்பினின் உடலில் காயங்கள் இருந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக அதை மீட்டு கரிமேனியாறு கடலில் கலக்கும் பகுதியில் கொண்டு போய் விட்டனர். தூத்துக்குடியில் உள்ள மீன்வளத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அங்கிருந்து யாரும் வராததால் இரவு 7 மணியளவில் உடன்குடி கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு டால்பின் குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இதை மீண்டும் கடலில் கொண்டு போய்விட்டனர்.
கரை ஒதுங்கிய டால்பின் குட்டியை அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
மீன்வளத் துறையின் அலட்சியம்...
மணப்பாடு கடற்கரையில் டால்பின் குட்டி காயங்களுடன் கரை ஒதுங்கியதை பொதுமக்கள் காலை 10 மணிக்கே தூத்துக்குடி மீன்வளத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அலட்சியத்துடன், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டனர்.
இதையடுத்து பொதுமக்கள் திருச்செந்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களோ இங்கு யாரும் ஆட்கள் இல்லை. பேசாமல் நீங்களே டால்பின் குட்டியை கடலில் விட்டு விடுங்கள் என்றனராம். இதையடுத்து டால்பின் குட்டியை மீண்டும் படகில் அடிபடாமல் பொது மக்களே அதை மீட்டு கடலில் விட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications