கணவரோடு மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த மாணவி

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கல்யாணத்தை முடித்த கையோடு, புதுக் கணவருடன் திருமணக் கோலத்தில் கல்லூரி மாணவி தேர்வு எழுத வந்தார்.

நாகர்கோவிலை அடுத்த வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் நாகர்கோவில் அடுத்த பழவிளை கல்லூரியில் பி.எட் படித்து வந்தார்.

மகேஸ்வரிக்கும், கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணியாற்றும் அகஸ்திவரத்தை சேர்ந்த சிதம்பர கிருஷ்ணன் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. மாணவி மகேஸ்வரிக்கு நேற்று செய்முறை தேர்வும் இருந்தது.

தாலி கட்டிய கையோடு மணமகனுடன் நேற்று மதியம் மாணவி மகேஸ்வரி கல்லூரிக்கு வந்தார். பின்னர் செய்முறை தேர்வுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்த சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.

அங்கு மணமகள் அலங்காரத்தில் இருந்தவாறு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் செய்முறைத் தேர்வை முடித்தார். ஒருமணி நேரம் வரை பள்ளியில் இருந்து செய்முறை தேர்வை முடித்துவிட்டு வெளியில் காத்திருந்த மணமகனுடன் புறப்பட்டு சென்றார்.

புதுமண தம்பதிகளுக்கு மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+