ஈரான் அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் பெரும் வெற்றி - 'பிராடு' தேர்தல் என போட்டியாளர் பேட்டி!

ஈரான் அதிபர் தேர்தல் விதிப்படி மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெறுபவர்தான் அதிபராக முடியும். இல்லாவிட்டால் மறுபடியும் தேர்தல் நடத்தப்படும்.
ஆனால் அகமதிநிஜாத் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இதை போட்டியாளரான மீர் உசேன் மெளசவி மறுத்துள்ளார். தேர்தலில் நான்தான் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் கடைசி நேரத்தில் மோசடி நடந்துள்ளது. இதை எதிர்த்து நான் வழக்கு தொடருவேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஈரான் அதிபர் தேர்தல் முடிவை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தன. மெளசவி வெற்றி பெறக் கூடும் என சில செய்திகள் கூறி வந்தன. ஆனால் அகமதிநிஜாத் அபார வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் மோசடி குறித்து மெளசவி கூறுகையில், பல வாக்காளர்கள் வாக்களிக்கவே அனுமதிக்கப்படவில்லை.
மேலும், நான் எஸ்.எம்.எஸ். மூலம் செய்த பிரசாரத்தையும் தேர்தல் அதிகாரிகள் முறைகேடாக தடுத்தனர்.
இந்தத் தேர்தலில் நான்தான் வெற்றி பெற்றுள்ளேன். வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இருப்பினும் அதிபர் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் அகமதிநிஜாத் 64.8 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மெளசவிக்கு 32 சதவீத வாக்குளே கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
இன்று தேர்தல் முடிவை முறைப்படி தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
அமெரிக்க ஈரான் கவுன்சில் ஏமாற்றம்..
தேர்தல் முடிவு அதிருப்தி அளிப்பதாக வாஷிங்டனைச் சேர்ந்த தேசிய ஈரானிய அமெரிக்க கவுன்சில் தலைவர் திரிதா பார்சி தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய வெற்றியை அகமதி நிஜாத் பெற்றிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. எந்தவித மோசடியும் நடந்திருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை என்றார் அவர்.
அகமதிநிஜாத்தின் பரம வைரியான அமெரிக்கா, தேர்தல் வெற்றி குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications