ஆஸியில் மேலும் ஒரு இந்தியருக்கு அடி - போன், பணம் திருட்டு

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் பிபின்பாய் படேல். 24 வயதாகும் படேல், மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் சமையல் கலை படிப்பு படித்து வருகிறார்.
நேற்று தனது காரில் அவர் ஏறப் போன சமயத்தில் ஒரு கும்பல் அங்கு வந்தது. ஹர்திக்கைத் தாக்கிய அவர்கள் அவர் வைத்திருந்த செல்போன், கார் சாவி, பர்ஸ், பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு போய் விட்டது.
தாக்குதலில் காயமடைந்த ஹர்திக் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இன்று அவர் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எனது காரி்ல ஏறப் போன சமயம், 3 பேர் அங்கு வந்தனர். 2 பேர் எனக்கு குறுக்கே நின்று கொண்டு முகத்தில் தாக்கினர்.
போதைக்கு அடிமையான கும்பலைப் போல அவர்களைப் பார்த்தால் தெரிந்தது. வெறுமனே அடித்து விட்டு என்னிடமிருந்த சில பொருட்களை பறித்துக் கொண்டு அவர்கள் போய் விட்டனர்.
என்னை அவர்கள் பலமாக தாக்கியபோது நான் மயக்கத்தில் கீழே விழுந்தேன். அப்போது அவர்கள், இந்தியனே நாட்டை விட்டு வெளியேறி விடு என்று கோபமாக கத்தியதைக் கேட்டேன்.
இப்போதெல்லாம் மெல்போர்ன் நகரில் பகலில் கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை. விரைவில் நான் நாடு திரும்பி விட வேண்டும் என நினைக்கிறேன் என்றார் ஹர்திக்.
இந்தியர்கள் மீதான 12வது இனவெறித் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications