கொலை வழக்கு - பவார் கட்சி எம்.பிக்கு சிபிஐ காவல்
Subscribe to Oneindia Tamil
மும்பை: காங்கிரஸ் தலைவர் பவன்ராஜே நிம்பல்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பதம் சின் பாட்டீல், ஜூன் 20ம் தேதி வரை சிபிஐ காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தவிர இந்த கொலை வழக்கில் கைதான அவரது கூட்டாளிகள் மோகன் சுக்லா, சதீஷ் மன்டேட் ஆகியோர் ஜூன் 26ம் தேதி வரை சிபிஐ காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சிபிஐ கோர்ட்டில் பதம் சின் பாட்டீல் தாக்கல் செய்த ஒரு மனுவில், குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு சிபிஐ என்னை கட்டாயப்படுத்துகிறது.
மேலும், உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்டவற்றுக்கு சம்மதிக்குமாறும் அவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் எனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த சோதனைகளுக்கு நான் உட்பட முடியாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications