கடற்கொள்ளையரிடம் பிடிபட்ட இந்திய மாலுமிகளை மீட்ட நேட்டோ கப்பல்
மொகாதிசு: சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய மாலுமிகள் 14 பேரை நேட்டோ போர்க் கப்பல் மீட்டுள்ளது.
ஏமன் வளைகுடா பகுதிகளுக்கு செல்லும் கப்பல்களை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த ஆண்டு 111 கப்பல்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால், இந்தாண்டு முதல் ஐந்து மாதத்தில் மட்டும் அது 133 ஆக உயர்ந்துள்ளது.
ஜூன் 3ம் தேதி சோமாலிய தலைநகர் மொகாதிசுவுக்கு அருகில் இருக்கும் பிரேவா என்ற துறைமுகத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு குஜராத்தை சேர்ந்த கப்பல் 14 மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்த விஎச்எப் ரேடியோவை உடைத்து கப்பல் அதிகாரிகளால் உதவி குரல் எழுப்ப முடியாமல் செய்து விட்டனர்.
பின்னர் கப்பலை கடத்தி சென்ற கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்தவர்களை அடுத்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். உடல் முழுவதும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இந்திய மாலுமிகள் வைத்திருந்த ரேடியோ, போன்கள், டிவி மற்றும் குடும்பத்தினருக்காக வாங்கி வைத்திருந்த பரிசு பொருட்கள் ஆகியவற்றை பறித்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கப்பலில் இருந்து மாலுமிகளின் உடல்நிலை மோசமடைய கடற் கொள்ளையர்கள், மாலுமிகளை விடுவித்துள்ளனர்.
நடுக்கடலில் உணவு எதுவுமின்றி தத்தளித்து கொண்டிருந்த அவர்கள் போர்ச்சுகீஸைச் சேர்ந்த நேட்டோ போர்கப்பல் ஒன்று மீட்டு கரைக்குக் கொண்டு வந்தது.
போர்ச்சுக்கீசிய கப்பலின் தலைவர் டாரியோ பிரசியாசோ கூறுகையில், நாங்கள் அவர்களை பார்த்து காப்பாற்றவில்லை என்றால் அனைவரும் இறந்து போயிருப்பார்கள். அவர்களிடம் கைவசம் எந்த உணவு பொருளும் இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications