ஜூலை 6-மத்திய பட்ஜெட்: 3ல் ரயில்வே பட்ஜெட்
டெல்லி: 2009-10ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 6ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட் 3ம் தேதி தாக்கலாகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் ஆகஸ்டு 7ம் தேதி வரை நடக்கிறது.
இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜூலை 3ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த பின் சனி, ஞாயிறான 4,5ம் தேதிகள் நாடாளுமன்றத்துக்கு விடுமுறையாகும்.
6ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடியதும் மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்வார்.
2ம் தேதி கூட்டத் தொடர் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதிலேயே பொது பட்ஜெட் எப்படி இருக்கும் என்பது ஓரளவுக்குத் தெரிந்துவிடும்.
வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி இடைக்கால பட்ஜெட்டைத் தான் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
அதில், ஜூலை 31ம் தேதி வரையிலான செலவீனங்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications