ராகுல் பிறந்தநாளில் போராட்டம்-மாயாவதி
லக்னோ: ராகுல் காந்தியின் பிறந்தநாளில் தலித் மக்களுக்கு சமுதாய விருந்து படைத்து ஓட்டுக்களை கவர முயற்சித்து வரும் காங்கிரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். அவர்களின் நாடகத்தை மக்கள் அறிய செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்து, வரும் 2012ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் அக்கட்சி செயல்பட்டு வருகிறது. மேலும், மாயாவதி வசமிருக்கும் தலித் ஓட்டு வங்கியை தன்பக்கம் கவர முழுவீச்சில் இறங்கியுள்ளது.
வரும் 19ம் தேதி நடக்கவிருக்கும் ராகுல் காந்தியின் 39வது பிறந்தநாளை நல்லிணக்க தினமாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அன்று தலித்களுக்கு சமுதாய விருந்து கொடுத்து, தலித்களின் காவலனாக காங்கிரஸ் விளங்கும் என்பதை மக்கள் மத்தியில் அறிவிக்கும் முயற்சிகளில் வேகம் காட்டி வருகிறது.
காங்கிரசின் இத்திட்டத்தை முறியடிப்பது குறித்து விவாதிக்க பகுஜன் சமாஜ் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு மாயாவதி செய்தார்.
அதில் மாயாவதி பேசியது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில்,
ராகுல் மற்றும் காங்கிரசார் தலித் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். ராகுல் காந்தி, தலித் மக்களின் வீட்டில் ஒரு நாள் இரவு தங்குவது, அவர்கள் வீட்டில் சாப்பிடுவது போன்றவை எல்லாம் நாடகம் தான். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இது போன்ற ஏமாற்று வேலைகளில் மகாத்மா காந்தி உட்பட அனைத்து காங்கிரசார்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். தலித்களுக்காக உழைப்பது போல் சொல்லிவிட்டு பூனா ஒப்பந்ததத்தில் தலித் மக்களுக்கு கிடைக்கவிருந்த பல சலுகைகளை தட்டி பறித்தவர் தான் மகாத்மா காந்தி.
ராகுல் பிறந்த தினமான வரும் 19ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மற்றும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.
அம்பேத்கார், கன்சிராம் ஆகிய இருவரும் தான் உண்மையான தலித் தலைவர்கள். இவர்கள் தான் தலித் மக்களுக்காக போராடியவர்கள் என மாயாவதி தெரிவித்தார் என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications