காங்கிரசிலிருந்து மீரா விலக வேண்டும்-சோம்நாத்
டெல்லி: மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்பவர்கள் கட்சி விருப்பு, வெறுப்பு அற்றவராக இருக்க வேண்டும். இதனால் மீரா குமார் காங்கிரசில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவையின் சபாநாயகராக இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி. அணுசக்தி ஒப்பந்தத்தின் போது காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் விலகி கொண்ட போது தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
சபாநாயகர் பதவியில் இருக்கும் ஒருவர் எந்த கட்சிக்கு சார்பாக பேசக்கூடாது. கட்சி விருப்பு, வெறுப்பின்றி செயல்பட வேண்டும். இதற்கு அவர் தனது கட்சியிலிருந்து விலகுவது தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
இடதுசாரிகள் தங்களது கோட்டைகளாக மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் தோல்வியடைந்துள்ளது. இதற்கு தற்போது இருக்கும் தலைமை தான் காரணம். பிரகாஷ் காரத்தின் தவறான வழிகாட்டுதல்களால் தான் கட்சியை இந்த இரண்டு மாநிலங்களிலும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
கேரளாவில் உட்கட்சி பூசல் அதிகரித்துவிட்டது. பொலிட்பீரோ உறுப்பினரான பினரயி விஜயன் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை விசாரிக்க ஆளுனரும் உத்தரவிட்டுள்ளார்.
இது போன்ற ஊழல் குற்றத்துக்காக இடதுசாரிகள் லாலு பிரசாத், அத்வானி மீது குற்றம்சாட்டினர். இந்த விஷயத்திலும் அவர்கள் இதே நிலையை பின்பற்ற வேண்டும் என்றார் சோம்நாத் சட்டர்ஜி.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications