ஆண்டு முடிவில் சென்னையில் என்எஸ்ஜி மையம்!
கோவை: சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தேசிய பாதுகாப்பு படை நிரந்தரமாக அமைக்கப்படும் என டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வந்த சரவணம்பட்டி மற்றும் ஆலாந்துறை காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு காவல் நிலையக் கட்டடங்களையும் தமிழக டிஜிபி ஜெயின் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தீவிராவத தாக்குதலில் இருந்து மக்களை காக்க, இந்தியாவில் 4 இடங்களில் தேசிய பாதுகாப்புப் படை அமைக்கப்பட இருக்கிறது. சென்னைக்கு அடுத்த வாரம் தேசிய பாதுகாப்பு படையினர் வர உள்ளனர். அவர்கள் அசோக் நகரில் இருக்கும் காவலர் பயிற்சிக் கல்லூரியில் தற்காலிகமாக தங்கி செயல்படுவர்.
தேசிய பாதுகாப்பு படையினருக்கு அலுவலக கட்டிடம் திறக்க நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையி்ல தேசிய பாதுகாப்பு படை நிரந்தரமாக அமைக்கப்படும்.
வாகனப் பெருக்கத்தாலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாலும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த சென்னையில் டிராபிக் பிளானிங் செல் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் டிராபிக் பிளானிங் செல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கனவாய்புதூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் திறமையாகச் செயல்பட்டு 24 மணிநேரத்துக்குள் குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications