இடைத் தேர்தலில் மின்னணு எந்திரம் பயன்படுத்தினால் வழக்கு போடுவோம் - பாமக
கோவை: நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்த நினைத்தால் வழக்கு தொடர்வோம் என பாமக மாநில தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
கோவை வந்த அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் செய்யப்பட்ட சதி காரணமாக தான் பாமக தோற்கடிக்கப்பட்டது. இதனால் வருகிற சட்டசபை இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க இருக்கிறோம்.
எங்கள் கோரிக்கை ஏற்காமல் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
நதி நீர் பிரச்சினையில் தமிழகம் உரிமை இழந்து தவிக்கிறது. அண்டை மாநிலங்களில் கையேந்தி நிற்கிறது. காவிரி பிரச்சனையில் இடைக்கால தீர்ப்பை கூட நாம் பெறவில்லை.
காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளில் உண்டாகும் வெள்ளநீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றன. இதை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும்.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருப்பது போல் பெரும் பாசன திட்டம் நம்மிடம் இல்லை. இதற்கான திட்டங்களை தமிழக அரசு வகுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் முறையற்ற வகையில் வசூல் செய்யப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்த அரசு உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார் ஜிகே மணி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications