நெல்லையில் புதிய மேம்பாலம்-17ம் தேதி தொடக்கம்
நெல்லை: நெல்லை வண்ணார்பேட்டையில் கட்டப்படவுள்ள புதிய மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி வரும் 17ம் தேதி தொடங்குகிறது.
நெல்லை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை ரவுண்டானாவில் 15.68 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
607 மீட்டர் நிளத்திற்கு தெற்கு-வடக்காக அமைக்கப்படும் இந்த மேம்பாலம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை கடந்த மார்ச் மாதம் நடந்தது. பின்னர் ரவுண்டானாவின் தெற்கு, வடக்கு பகுதியில் இருபுறங்களிலும் இருந்த அக்கராமிப்புகள், டீக்கடைகள், பழக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதை தொடர்ந்து வடக்கு பைபாஸ் சாலையோரமாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதைடுத்து தெற்கு பைபாஸ் சாலையிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே கான்கிரிட் தூண்கள் அமைப்பதற்காக துளை போடும் பணி வரும் 17ம் தேதி துவங்குகிறது. முதற் கட்டமாக தெற்கு பைபாஸ் சாலையில் மூன்று துளைகள் போடப்படுகின்றன. இதை தொடர்ந்து வடக்கு பைபாஸ் சாலையிலும் மூன்று துளைகள் போடப்படுகிறது.
இருபுறங்களிலும் தூண்கள் அமைப்பதற்காக மொத்தம் 104 துளைகள் போடப்படுகின்றன. ஒவ்வொரு துளையும் 21 அடி ஆழத்திற்கு போடப்படுகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications