ரயில்களில் 'யூஸ் அண்ட் த்ரோ' விரிப்புகள்-போர்வைகள்
திருச்சி: ரயில்களில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்திவிட்டு வீசும் (Use and throw) படுக்கை விரிப்பு, போர்வையை அறிமுகப்படுத்துகிறது தென்னக ரயில்வே.
முதல் கட்டமாக சென்னை-மதுரை இடையி்ல் இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே தலைமைப் பொறியாளர் கார்மெலஸ் கூறுகையில், ஒரு பயணிக்கு 2 படுக்கை விரிப்பு, ஒரு தலையணை வழங்கப்படும். இதை அவர்கள் வீட்டுக்கும் எடுத்துச் செல்லலாம். இந்தத் திட்டத்துக்கு போதிய வரவேற்பு கிடைத்தால் மற்ற ரயில்களிலும் இத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.
இந்த படுக்கை விரிப்புகள் விரைவில் நசிந்துவிடும் வகையில் பிளாஸ்டிக் கலக்காமல் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இவை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது.
இதற்கான கட்டணம் பயணக் கட்டணத்துடன் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
ஏசி பெட்டிகளில் வழக்கமாக பயணிகளுக்கு இரு படுக்கை விரிப்புகள், போர்வை, தலையணை ஆகியவை வழங்கப்படுகின்றன. இதி்ல் 20 சதவீத படுக்கை விரிப்புகள், போர்வைகள் திரும்பி வருவதில்லையாம். அதை பயணிகளே எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.
மேலும் பல பயணிகள் ரயில்வே நிர்வாகம் வழங்கும் போர்வை, படுக்கை விரிப்புகளை வாங்குவதும் இல்லை. அடுத்தவர் பயன்படுத்தியது எங்களுக்கு வேண்டாம் என்று சொல்பவர்களும் உள்ளனர்.
இந்த இரு சிக்கல்களையும் தீ்ர்க்கவே இந்த 'யூஸ் அண்ட் த்ரோ' விரிப்புகள், போர்வைகளை ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications