சென்செக்ஸ்... இன்றும் வீழ்ச்சிதான்!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் இன்று 250 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ந்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக சர்வதேச பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் சூழல் உள்ளதால், அனைத்து நாடுகளின் பங்குச் சந்தையிலும் ஒருவித நிச்சயமற்ற சூழல் நிலவியது.
இன்னொரு பக்கம் இந்தியப் பொருளாதாரத்தின் பணவாட்ட நிலை, முதலீட்டாளர்கள் மனதில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியதால், வர்த்தகம் கடைசி வரை சூடுபிடிக்காமலே போய்விட்டது.
வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் 200 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 257 புள்ளிகளை இழந்திருந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 104 புள்ளிகள் சரிந்தன.
இதனால் தொடர்ந்து 15000 புள்ளிகளுக்கும் கீழாகவே சென்செக்ஸ் குறியீட்டெண் தொடர்கிறது.
இன்று லாபம் சம்பாதித்த பங்குகள் குறைவுதான். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற சில பங்குகள் சுமாரான லாபத்தில் கைமாறின.
சுஸ்லான் எனர்ஜி, யுனிடெக், அம்புஜா சிமெண்ட், ஏசிசி, பவர் கிரிட் போன்றவற்றின் பங்குகள் பெரிய அளவில் நஷ்டம் தந்தன.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 14265 புள்ளிகளாகவும், நிப்டி 4251 புள்ளிகளாகவும் நிலைப் பெற்றது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications