100 போலீஸ்..3 நாள் சண்டை..தப்பிய கொள்ளையன்..சுட்டுக் கொலை
லக்னோ: உ.பி. மாநிலம் சித்ரகூட் பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒரு கொள்ளையனைப் பிடிக்க நூற்றுக்கணக்கான போலீஸார் நடத்தி வந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையின்போது அந்த கொள்ளையன் தப்பினான். இருப்பினும் போலீஸார் விடாமல் அவனை சுட்டுக் கொன்று விட்டனர்.
சினிமாவையும் மிஞ்சும் வகையிலான இந்த என்கவுன்டர், உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் சித்ரகூட் பகுதியைச் சேர்ந்தவன் கேவத். பயங்கர கொள்ளைக்காரன். ஏராளமான வழக்குள் உள்ளன. உ.பி., மபி ஆகிய மாநிலங்களில் கேவத்தும் அவனது கொள்ளைக் கூட்டமும் செயல்பட்டு வருகிறது.
இவர்கள் மீது 12க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இவனைப் பிடித்துக் கொடுத்தால் ரூ. 50 ஆயிரம் பரிசளிக்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.
இப்படிப்பட்ட பயங்கர கொள்ளைக்காரனான கேவத், சித்ரகூட்டில் உள்ள சுருவால் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
நீண்ட காலமாக தேடி வரும் இவனை இம்முறை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற முடிவில் நூற்றுக்கணக்கான போலீஸார் (அத்தனை பேர் கையிலும் பெரிய பெரிய துப்பாக்கி) அங்கு விரைந்தனர். வீட்டை முற்றுகையிட்ட அவர்களுடன், கொள்ளையன் கேவத் தனி நபராக மோதினான்.
இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. கடந்த மூன்று நாட்களாக இந்த சண்டை நடந்து வந்தது.
இப்படி மூன்று நாட்களாக சண்டை நடந்தும் கேவத்தைப் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தப்பினான் கொள்ளையன்.
இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் அந்தப் பகுதி முழுவதையும் அவர்கள் சல்லடை போட்டனர். இதில் கேவத் சிக்கினான். அவனை போலீஸார் சுட்டுக் கொன்று 3 நாள் வேட்டையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
ஒரு கொள்ளையனைப் பிடிக்க நடந்த இந்த சண்டையின்போது போலீஸ் தரப்பில் இருவர் கொல்லப்பட்டனர். ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் டிஐஜி ஆகியோர் காயமடைந்தனர். ஒரே ஒரு கொள்ளையனைப் பிடிக்கப் போய் இரு உயர் அதிகாரிகள் காயமடைந்திருப்பதும், இரு காவலர்கள் உயிரிழந்திருப்பதும் உ.பி. காவல்துறையை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications