கட்சிகளின் பெயரில் ஈழம், தமிழ், முஸ்லீ்ம் என்ற வார்த்தை இடம் பெற இலங்கை தடை?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலைப் புலிகளை ஒடுக்கி விட்ட நிலையில், அடுத்த கட்டமாக கட்சிகளின் பெயர்களில் ஈழம், தமிழ், முஸ்லீம் என்ற மதம் மற்றம் இனம் சார்ந்த பதங்கள் இடம்பெறுவதைத் தடை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இதுதொடர்பாக விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழ், தமிழர், ஈழம் என்ற வார்த்தை இனவெறியைக் குறிக்கும் சொல் என பல்வேறு சிங்களக் கட்சிகள் கூறி வருகின்றன. ஈழம் என்ற சொல்லே இருக்கக் கூடாது. அந்த சொல் இருக்கும் வரை தனி நாடு என்ற எண்ணமும் தமிழர்கள் மனதிலிருந்து மறையாது. மேலும், மேலும் இது பிரிவினைப் போக்கையே அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

எனவே இந்த வார்த்தைகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இவற்றை மட்டும் தடை செய்தால், தமிழர் விரோதப் போக்கு என வர்ணிக்கப்படுமோ என்ற பயத்தில், முஸ்லீ்ம் என்ற வார்த்தைக்கும் தடை விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாம். இதற்காக ஒரு சட்டத் திருத்தம் விரைவில் பிறப்பிக்கப்படுமாம்.

மேலும் நாட்டில் செயல்படாமல் உள்ள கட்சிகளையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+