மதுரை: 5 பாஸ்போர்ட் புரோக்கர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் புரோக்கர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் மதுரை, தேனி, இராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட
மக்களுக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாஸ்போர்ட் வேண்டிவரும் பொது மக்களிடம் விரைவாக பணிகளை முடித்து தருவதாகக் கூறி புரோர்க்கள் பலர் பணம் பறித்து வருகின்றனர்.
இது குறித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி மேத்யூ, போலீஸ் கமிஷனர் நந்தபாலனிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் பாஸ்போர்ட் அலுவலக பகுதியில் திடீர்
சோதனை நடத்தி மேலூரை சேர்ந்த முகமது இப்ராகிம் (42), ஆத்திகுளம் சந்தோஷ் (22), புதுமாகாளிப்பப்டியை சேர்ந்த ராஜசேகர் (32), சிவகங்கையை சேர்ந்த கோவிந்தராஜ் (26), புதூரை சேர்ந்த பீட்டர் (22) ஆகிய புரோக்கர்களை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications