நிவாரண கப்பல்-இலங்கை வற்புறுத்த கருணாநிதி கோரிக்கை

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடித்ததை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்துக் கொடுக்கவுள்ளார்.
இலங்கையில் நடந்த போரில் காயமடைந்தும், வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டும் உள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் ராணுவம் அமைத்துள்ள திறந்த வெளி முகாம்களி்ல் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள பெண்களிடம் ராணுவ வீரர்கள் முறைகேடாக நடப்பது, இளைஞர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்று கொல்வதுமாக கொடுமைகள் நடந்து கொண்டுள்ளன.
இந்த மக்களுக்காக ஐரோப்பா வாழ் தமிழர்கள் கேப்டன் அலி (வணங்காமண்) என்ற கப்பலில் 884 டன் உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இந்த கப்பலில் இருந்து உதவிப் பொருட்களை இறக்க அனுமதிக்காமல் இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் இந்தக் கப்பல் இப்போது இந்திய கடல் எல்லையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் கருணாநிதி ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார். அதில்,
பாதிப்புக்கு உள்ளான மக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவுவதற்காக சர்வதேச சமுதாயம் நிவாரணப் பொருட்களை அளிப்பது வழக்கம். இதை தடுப்பது மனிதாபிமானமல்ல.
எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு அந்தக் கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்களை இறக்குவதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்த வேண்டும்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூலம் இவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை அமைச்சர் பொன்முடி டெல்லிக்கு விரைந்து அதை நேரடியாக கிருஷ்ணாவிடம் வழங்கவுள்ளார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜய்காந்தும் இன்று காலை கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications