போலியோ மருந்துக்கு பதில் குழந்தைக்கு டெட்டால் கொடுத்த நர்ஸ்
பானாஜி: குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக டெட்டால் மருந்தை நர்ஸ் கொடுத்த சம்பவம் கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவா தலைநகர் பானாஜியை சேர்ந்தவர் ராம சர்லேகர். இவர் தனது மூன்று மாதா குழந்தைக்கு அருகிலிருந்த வல்போய் சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து போட அழைத்து சென்றார். அப்போது குழந்தைக்கு போலியோ சொட்டுக்கு மருந்துக்கு பதிலாக டெட்டால் மருந்து கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த குழந்தைக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு குழந்தையின் தந்தை தான் காரணம் என மாநில சுகாதார துறை இயக்குனர் ராஜ்நந்தா தேசாய் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
அந்த குழந்தைக்கு போலியோ போட்ட பின்னர் பாராசி்டமால் மருந்து வேண்டும் என்று அந்த குழந்தையின் தந்தை வற்புறுத்தியுள்ளார். மேலும், அவரே அத்துமீறி அலமாரியில் இருந்த பாட்டிலை எடுத்து கொடுத்துள்ளார். அது டெட்டால் பாட்டில் என்பது பின்னர் தான் தெரியவந்தது என்றார்.
ஆனால் இதை கோவா சுகாதார துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சுகாதார துறை இயக்குனர் கூறியது போல் அந்த குழந்தையின் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. பணியில் இருந்த நர்ஸ் தான் கை தவறி போலியோ பாட்டிலுக்கு பதில் டெட்டாலை எடு்தது குழந்தைக்கு கொடுத்துவிட்டார்.
அவரை உடனடியாக சஸ்பென்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த குழந்தையின் பெற்றோர் அவரை மன்னித்து விடுமாறு கூறிவிட்டனர். இது போன்ற சம்பவம் இனி மீண்டும் நடக்காது என நான் உறுதி கூறுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications