கடையநல்லூரில் வாந்தி பேதி- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி
கடையநல்லூர்: கடையநல்லூரில் 30க்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி, பேதி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் சரியாக வினியோகிக்கப்படாததாலும், சுகாதார சீர்கேடு காரணமாகவும் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன.
கடந்த இரு தினங்களாக மேலகடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், முத்துசாமியாபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததாலும், பல்வேறு இடங்களில் குப்பைகள் நிரம்பி சுகாதார சீர்கேடாக இருப்பதாலும் வாந்தி,பேதி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதுடன் துரித நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ள வேண்டும் எனவும், வாந்தி பேதி மேலும் பரவாமல் இருக்க சுகாதார அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications