புதிய ரேசன் கார்டுகளே வழங்கவில்லை-அதிமுக
சென்னை: அதிமுக ஆட்சியில் 38 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் புதிதாக ரேசன் கார்டுகளே வழங்கப்படவில்லை என்று அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் சட்டசபையில் புகார் கூறினார்.
சட்டசபையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதன் விவரம்:
செங்கோட்டையன் (அதிமுக): தமிழ்நாட்டில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுப்பதாக சொல்கிறார்கள். மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அவை தரமானதாக இல்லை. ரேசன் அரிசி தாராளமாக கடத்தப்படுகின்றன.
அமைச்சர் வேலு: ரேசன் அரிசியை கொண்டு வரும் லாரிகள் முறைப்படி குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. லாரிபகள் குறிப்பிட்ட வழியாக செல்லாமல் வேறு வழியில் சென்றாலே அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரிசி கடத்தல் தொடர்பாக 4216 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரிசி கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்கிறது.
செங்கோட்டையன்: அதிமுக ஆட்சியில் 38 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கும் இன்றும் முழுமையாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. இந்த ஆட்சியில் புதிதாக ரேசன் கார்டுகளே வழங்கப்படவில்லை.
அமைச்சர் வேலு: கடந்த ஆட்சியில் நீங்கள் 38 லட்சம் புதிய ரேசன் கார்டுகளை வழங்கி விட்டு அதற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்கி இருக்கிறோம். தற்போது 12 லட்சத்து 80 ஆயிரத்து 314 ரேசன் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. எனவே புதிய ரேசன் கார்டுகள் வழங்கவில்லை என்று கூறுவது தவறு.
செங்கோட்டையன்: ஒரு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி வழங்குவதாக கூறுகிறீர்கள். ஆனால் 10 கிலோவுக்கு மேல் வழங்கப்படுவதில்லை.
அமைச்சர் வேலு: இந்தக் குற்றச்சாட்டும் தவறானது. தகுதியுள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications