புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய சிறை வார்டர் கைது
சென்னை: தாதா வெல்டிங் குமார் கொலைச் சம்பவ பாதிப்பு இன்னும் மறையாத நிலையில் புழல் சிறைக்குள் பெருமளவிலான கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கடத்த முயன்ற தலைமை வார்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புழல் சிறைக்குள் சமீபத்தில் ரவுடி வெல்டிங் குமார் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் மூலம் சிறைக்குள் செல்போன்கள், இரும்புக் கம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், சிகரெட், கஞ்சா போன்ற போதை வஸ்துக்குள் தங்கு தடையின்றி புழங்கி வருவது தெரிய வந்தது.
இதையடுத்து சிறை வாசல்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் கடும் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இருப்பினும் கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்படுவது தங்கு தடையின்றி தொடர்ந்து வருவது தற்போது நிரூபணமாகியுள்ளது. தலைமை வார்டர் ஒருவரே கடத்தலில் ஈடுபட்டு கைதாகியுள்ளார்.
தலைமை வார்டர் பாலகிருஷ்ணன் (50) நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற போது அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.
இதையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பண்ணன் ஆகியோர் பாலகிருஷ்ணனை சோதனை செய்தனர்.
அப்போது பாலகிருஷ்ணனின் ஷூவில் 49 பொட்டலங்கள் கஞ்சா (மொத்தம் 75 கிராம்), 3 பாக்கெட் சிகரெட், 3 பாக்கெட் மூக்கு பொடி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கண்காணிப்பாளர் ராஜேந்திரன் புழல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications