சுற்றுலா பயணிகளிடம் 100 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
பாபநாசம்: பாபநாசம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பயணிகள் வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு, உடைத்து அழிக்கப்பட்டது.
ஜூன், ஜூலை மாதத்தில் தென் மேற்கு பருவமழை காலத்தில் குற்றாலத்துக்கு சுற்றுலா வரும் அனேக பயணிகள் முண்டந்துறை, அகஸ்தியர் அருவி, பாணதீர்த்தம் ஆகிய பகுதிகளுக்கும் சென்று உற்சாகமாக இருப்பார்கள்.
இந்நிலையில் நேற்று பாபநாசத்தில் உள்ள சோதனை சாவடியில் வனத்துறையினரும், விகேபுரம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசாரும் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவர்கள் மதுபான பாட்டில்களுடன் வந்த ஏராளமான பயணிகளை பிடித்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பாட்டில்களை பாறையில் உடைத்து அழித்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் கூறுகையில், சுற்றுலா தலங்களில் மதுபாட்டில்களை பயணிகள் கொண்டு செல்வதால் குடித்து விட்டு வாய் தகராறு, கைகலப்பு, பெண்களிடம் சில்மிஷம் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இவைகளை தடுக்க அங்கு மதுபானங்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பயணிகள் மதுபாட்டில்களை கொண்டு செல்வதால் சோதனை நடத்தப்பட்டது என்றார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications