மீனவர்கள் கோஷ்டி மோதல்-போலீஸ் துப்பாக்கி சூடு
புதுச்சேரி: புதுச்சேரியில் இரு பிரிவு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பல வீடுகள் சூறையாடப்பட்டன. கலவரம் கட்டுகடங்காமல் போவதை கண்டு போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு மூலம் பதட்டத்தை தணித்தனர்.
புதுச்சேரி வம்பா கீரப்பாளையத்தில் உள்ள அங்காள அம்மன்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னி்ட்டும், கடலில் மீன்பிடிப்பது தொடர்பாகவும் இரு பிரிவு மீனவர்களுக்குள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் பின்பு கலவரமாக உருவெடுத்தது. இதில் சக்திவேல், ராஜவேல் என்ற இரண்டு மீனவர்கள் மற்றும் மூன்று பெண்கள் படுகாயமடைந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிலரது வீடுகளும் சூறையாடப்பட்டன.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலவரத்தை கட்டுப்படுத்த வடக்குப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சிவதாசன் தலைமையில் ஆயுதம் ஏந்திய போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி ஏழு முறை துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கலவரத்திற்கு காரணமான வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த 40 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் கலவரம் வெடிக்காமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications