இளம் தலைவர்களிடம் கட்சி பொறுப்பு-யஷ்வந்த் சின்ஹா

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சி நிர்வாகிககளை நீக்க வேண்டும் என்று கூறி போர்க்கொடி உயர்த்தி, தனது கட்சிப் பதவிகளை சமீபத்தில் ராஜினாமா செய்தவர் யஷ்வந்த் சின்ஹா.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த இரண்டு நாள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹாவின் போக்கை சிலர் விமர்சித்துப் பேசினர். அவர் தொண்டர்களிடன் ஆதரவைப் பெறாதவர் என்றும் விமர்சிக்கப்பட்டது.
இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா பதிலளிக்கையில், எனது பலம் என்ன என்பதை ஹசாரிபாக் தொகுதியில் வெற்றி பெற்று நிரூபித்துள்ளேன்.
யஷ்வந்த் சின்ஹா என்றுமே சாதாரணமானவனாக இருந்தவன் இல்லை. பதவிக்காக அலைந்தவனும் அல்ல.
என்னால் எந்த நேரத்திலும் டெல்லியில் 10 ஆயிரம் பேரைத் திரட்டிக் காட்ட முடியும்.
கட்சியைப் பலப்படுத்த நான் தொடர்ந்து பாடுபடுவேன். கட்சிக் கட்டுப்பாட்டை நான் ஒருபோதும் மீறியதில்லை. எனது ராஜினாமா முடிவை நான்தான் மீடியாக்களுக்கு கசிய விட்டதாக கூறப்படும் புகாரை திட்டவட்டமாக மறுக்கிறேன்.
உண்மையில் எனது ராஜினாமாக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தியே மீடியாக்கள் மூலமாகத்தான் எனக்குத் தெரிய வந்தது. கட்சியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எனக்கு எந்தத் தொடர்பும் வரவில்லை.
எனது கடிதத்தை யார் மீடியாவுக்கு லீக் செய்தது என்பதைக் கண்டுபிடிக்குமாறு கட்சி மேலிடத்தைக் கேட்டுக் கொள்கிறேன். கட்சிக்குள் இருக்கும் சிலர்தான் இப்படிச் செய்துள்ளனர்.
கட்சியை பலப்படுத்த இளம் தலைமுறைத் தலைவர்களிடம் பொறுப்பைத் தர வேண்டும். கட்சியில் ஏராளமான இளம் தலைமுறையினர் உள்ளனர். அவர்களி்ல் சிறந்தவர்களைத் தேர்வு செய்து பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்றார்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications