புதுச்சேரி ராஜ்யசபா எம்பி சீட்: காங்-திமுக மோதல்

புதுச்சேரியில் ஒரே ஒரு ராஜ்யசபா சீட் உள்ளது. ராஜ்யசபா எம்பியாக இருந்த மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி சமீபத்திய மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதனால் இந்த இடம் காலியானது.
இந்த இடத்தை காங்கிரஸ் தனக்கே வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் அதை திமுக தங்களுக்குத் தர வேண்டும் என்று கோரியுள்ளது.
இன்று புதுச்சேரி திமுக அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் நடந்த அக் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில், புதுச்சேரியில் காலியாக உள்ள ராஜ்யசபா சீட்டை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தை வெல்ல திமுகவும் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டால் தான் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு தந்து வருகிறது. இந்த ஆதரவில் தான் ஆட்சி நடக்கிறது.
மத்தியில் தாங்கள் கேட்ட அமைச்சரவை இடங்களைத் தராதது, கேட்ட இலாக்காக்களைத் தராதது, தமிழகததில் ஆட்சியில் பங்கு கேட்டு தொல்லை தருவது என்று காங்கிரஸ் தொடர்ந்து தங்களை எரிச்சலூட்டி வருவதற்கு பதிலடியாகவே புதுச்சேரி எம்பி தொகுதியைக் கேட்டு திமுக 'செக்' வைப்பதாகத் தெரிகிறது.
இதனால் இரு கட்சிகள் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுத்து வரும் கண்ணனின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அறிவித்துள்ளது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications