ராஜபக்சே சகோதரர்கள் இன்று இந்தியா வருகை

இலங்கையில் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னர் டெல்லி வரும் முதல் உயர் மட்டக் குழு இதுவாகும். இந்தத் தகவலை மிக ரகசியமாக வைத்திருந்து இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கோதபய, பாசில், லலித் வீரேதுங்கா ஆகியோர் கொண்ட இந்தக் குழு பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன், பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசுகின்றனர்.
இறுதியாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் சந்திக்கின்றனர்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்தும், தமிழர்களுக்கு சம அரசியல் அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் இவர்கள் ஆலோசனை நடத்தப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிபர் ராஜபக்சேவும் இந்தியா வர விருப்பம் தெரிவித்து வருகிறார். ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பு வரலாம் என்பதால் அவரை பின்னர் வருமாறு மத்திய அரசு கூறிவிட்டது.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, சம அந்தஸ்து குறித்து பேச்சு நடத்தவுள்ளோம். மேலும் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணக் கப்பலை அனுமதிக்குமாறும் இலங்கை குழுவிடம் கோருவோம் என்றார்.
திமுக எம்பி்க்கள் கோரிக்கை..
இந் நிலையில் இன்று கிருஷ்ணாவை டெல்லியி்ல் சந்தித்த திமுக எம்பிக்கள், வணங்காமண் கப்பலை அனுமதிக்குமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதிலுள்ள நிவாரணப் பொருட்களை தொண்டு நிறுவனங்கள் மூலம் தமிழர்களுக்குச் கொண்டு போய் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கப்பல் மீது சந்தேகம் உள்ளதாகக் கூறி இந்தியக் கடல் எல்லையிலிருந்து நமது கடற்படை விரட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இலங்கையிடம் இந்தக் கப்பலை அனுமதிக்குமாறு மத்திய அரசு கோரப் போகிறதாம். இதை கிருஷ்ணாவை சந்தித்து திமுக வலியுறுத்துகிறதாம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications