உத்தரகண்ட் முதல்வராக ரமேஷ் போக்ரியால் தேர்வு

உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலி்ல உத்தரகண்டில் பாஜக படுதோல்வியடைந்தது.
இதையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பி.சி.கந்தூரி பதவி விலக வேண்டும் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பகத் சிங் கோஷியாரி ஆதரவு எம்எல்ஏக்கள் போர்கொடி தூக்கினர். மேலும், தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து நேற்று பி.சி.கந்தூரி தனது பதவியை ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் கொடுத்தார்.
இந் நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் 35 பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று டெல்லியி்ல் நடந்தது. இதில் கந்தூரியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் போக்ரியால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராமர் கோவில் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றவர் 51 வயதாகும் போக்ரியால். அப்போது உத்தரகாண்ட் மாநிலம் இல்லை. பாஜக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தபோது போக்ரியால் மலைப் பிரதேச வளர்ச்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1991ம் ஆண்டு முதல் முறையாக உ.பி. சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது கரன்பிரயாக் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் 93, 96 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டபோது (2000) மாநிலத்தின் முதல் முதல்வராக பதவியேற்ற நித்யானந்த சுவாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியேற்பு விழாவைப் புறக்கணித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அவரை கட்சித் தலைமை சமரசப்படுத்தியது. அதன் பின்னர் நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
முன்னாள் பத்திரிக்கையாளரான போக்ரியால், அரசியலில் நிதானமாக வளர்ந்து வந்தவர். தற்போது முதல்வர் பதவி அவரைத் தேடி வந்துள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications