சென்னையில் பிடிபட்ட அல்ஜீரிய நபர் விடுதலை-இன்டர்போல் நடவடிக்கை
சென்னை: அல்ஜீரியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகக் கூறி கடந்த 17 ஆண்டுகளாக இன்டர்போல் அமைப்பால் தேடப்பட்டு, சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட தொழிலதிபர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 18ம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சலீம் அப்பாசி (42) குடியுரிமைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக இன்டர்போல் அலெர்ட் இருந்ததால் இந்த நடவடிக்கையை குடியுரிமைப் பிரிவினர் எடுத்தனர்.
ஆனால், அல்ஜீரியாவில் தனது தந்தை அரசியல் தலைவராக உள்ளதாகவும், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக தனது குடும்பத்தினர் மீது அல்ஜீரிய அரசு குண்டுவெடிப்பு வழக்கைப் போட்டதாகவும், இதனால் கத்தார் நாட்டுக்கு குடிபெயர்ந்து நெடுங்காலம் ஆகிவிட்டதாகவும் அப்பாசி கூறினார்.
மேலும் இப்போது சூரிய சக்தியால் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நடத்தி வருவதாகவும், கர்நாடக அரசுக்கு இது தொடர்பான ஆலோசனை வழங்கவே இந்தியா வந்ததாகவும், தான்
தீவிரவாதியோ, குற்றவாளியோ கிடையாது என்றும் கூறினார்.
ஆனாலும் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. அதிகாரிகளும் இவரிடம் விசாரணை நடத்திவிட்டு இன்டர்போலுக்கு தகவல் தந்தனர்.
இன்டர்போல் போலீசார் அல்ஜீரிய நாட்டுக்கு தகவல் தந்தனர். ஆனால் தற்போது விசாரணைக்கு அப்பாசி தேவையில்லை என்று அல்ஜீரிய அரசு அறிவித்துவிட்டது.
இதையடுத்து அவர் மீதான ரெட் கார்னர் நோட்டீஸை இன்டர்போல் வாபஸ் பெறுவதாக அறிவித்து இது தொடர்பான உத்தரவை ஐ.பிக்கு அனுப்பியது. அவர்கள் தமிழக போலீசாருக்கு தகவல் தந்து அப்பாசியை விடுவிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து தாம்பரம் நீதிமன்றத்தில் அப்பாசி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் இவர் விசாரணைக்கு தேவையில்லை என்று அல்ஜீரியா நாட்டு போலீசாரும் இன்டர்போலும் தெரிவித்துவிட்டதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அப்பாசியை உடனடியாக விடுதலை செய்ய மாஜிஸ்திரேட் சரவணன் உத்தரவிட்டார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications