3,500 மினி பஸ்கள்-7,500 ஆட்டோக்களுக்கு பெர்மிட்

அதே போல ரூ. 362 கோடி செலவில் போக்குவரத்துக் கழகங்களுக்கு அடுத்த 3 மாதங்களில் 3,000 பஸ்கள் வாங்கப்படும் என்றார்.
சட்டசபையில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
அப்போது போக்குவரத்துத்துறையின் மூலம் வரும் கூடுதல் வருமானம் 'பைபாஸ்' வழியாக எங்கே செல்கிறது என்று அதிமுக மாஜி போக்குவரத்து அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் கூறியதால் அவருக்கும் அமைச்சர் நேருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் விவரம்:
மணியன் (பாமக): பஸ்களை அரசு சரியாக பராமரிக்காததால் நடுத்தர மக்கள் அதை பயன்படுத்தவே தயங்குகிறார்கள்.
அமைச்சர் நேரு: முந்தைய ஆட்சியில் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். இப்போது தினமும் 25 லட்சம் பேர் அரசு பஸ்களை கூடுதலாக பயன்படுத்தி வருகின்றனர்.
நத்தம் விஸ்வநாதன் (அதிமுக): புரட்சித் தலைவியின் ஆட்சியில் தான் போக்குவரத்துத்துறை லாபத்தில் இயங்கியது. ஆனால், இப்போது இரண்டே ஆண்டுகளில் ரூ. 1,000 கோடி நஷ்டம் என்கிறீர்கள். கூடுதல் வருவாய் எல்லாம் பைபாஸ் வழியாக எங்கே செல்கிறது?.
நேரு: முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் யார் வேண்டுமானாலும் இது குறித்துப் பேசலாம். ஆனால், நத்தம் விஸ்வநாதனுக்கு அது பற்றிப் பேச அருகதையே இல்லை.
உங்கள் ஆட்சியி்ல், கோவைக்கு 50 லட்சம், தூத்துக்குடிக்கு 1 கோடி என்று பேரம் பேசி போக்குவரத்துத்துறையையே தனியாருக்கு விற்க முயன்றவர்கள் தான் நீங்கள்.
ஆனால், உங்களது நடவடிக்கையை அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான இப்போதைய முதல்வர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். அவர்கள் எத்தனை பஸ் தடங்களை வேண்டுமானாலும் தனியாருக்குத் தரட்டும். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை மீண்டும் அரசுடமையாக்குவேன் என்றார்.
இதனால் தான் வேறு வழியில்லாமல் நீ்ங்கள் அந்தத் திட்டத்தை கைவிட்டீர்கள். ஊழியர்களுக்கு போதிய சம்பளம் தராதவர்கள் தான் நீங்கள். போனசும் தரவில்லை, புதிய ஊழியர்களையும் நியமிக்கவில்லை. கூடுதல் வேலை வாங்கி குறைந்த சம்பளம் தந்தீர்கள்.
நாங்கள் 8 மணி நேரம் மட்டுமே வேலை வாங்கி உரிய ஊதியம் தருகிறோம். போனஸ் தருகிறோம். கூடுதல் ஊழியர்களை நியமித்தோம். இந்த ஆட்சியில் பயணிகள் அதிகம், இதனால் வருவாயும் அதிகம். செலவும் அதிகம்.
நத்தம் விஸ்வநாதன்: செஞ்சி்க் கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் தேசிகனாக முடியாது. பெரிய மீசை வைத்திருப்பவர்கள் எல்லாம் கட்டபொம்மனாக முடியாது.
நேரு: மீசை வளர்வதற்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும். உங்களுக்கு மீசை வளராவிட்டால் நானா பொறுப்பு? (அவையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது)
குமரகுரு (அதிமுக): பஸ்களை பல வண்ணங்களில் மாற்றி மக்களை ஏமாற்றி பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள்.
நேரு: பஸ்கட்டணத்தை உயர்த்தியது யார் என்பது மக்களுக்கு தெரியும். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தான் பஸ் கட்டணத்தை 6 காசு உயர்த்தினார். தற்போது 18 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தும் நாங்கள் பஸ்கட்டணத்தை ஏற்ற வில்லை. உங்கள் ஆட்சிதான் மக்களை ஏமாற்றியது.
செங்கோட்டையன் (அதிமுக): நாடாளுமன்றத் தேர்தலின் போது பஸ் கட்டணத்தை குறைத்து மக்களை ஏமாற்றினார்கள். இப்போது தேர்தல் முடிந்து 3 மாதம் ஆகிய பிறகும் பஸ் கட்டணத்தை குறைக்கவில்லை.
நேரு: மக்களை நாங்கள் ஏமாற்றாததால் தான் இவ்வளவு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
செங்கோட்டையன்: காந்தியை காட்டி ஏமாற்றினீர்கள்.
துணை சபாநாயகர் துரைசாமி: காந்தியை காட்டி ஏமாற்றவில்லை. காந்தி (செல்வனை) நிறுத்தி நாமக்கல்லில் ஜெயிக்க வைத்திருக்கிறோம் என்றார்.
பின்னர் அமைச்சர் நேரு கூறுகையில், தமிழகத்தில் மேலும் 3,500 மினி பஸ்களுக்கு அனுமதி தரப்படும். 7,500 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்படும்.
அதே போல ரூ. 362 கோடி செலவில் போக்குவரத்துக் கழகங்களுக்கு அடுத்த 3 மாதங்களில் 3,000 பஸ்கள் வாங்கப்படும் என்றார்.
-
Rajiv Gandhi: செந்தில் பாலாஜியிடமே முறைத்து கொண்ட ராஜீவ் காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா? -
வடக்கே வன்னியர்..தெற்கே தேவர்! 3 பேருக்கு செக்.. அய்யா ராமதாஸை வைத்து சின்னம்மா சசிகலா போடும் கணக்கு -
அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்? -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்!












Click it and Unblock the Notifications