இந்தியனைவிட சிங்களனே மேல்-திருமா ஆவேசம்
சென்னை: வணங்காமன் கப்பலை வெளியேற்றிய இந்திய அரசின் செயல் கண்டனத்துக்குரியது. இந்திய அரசின் கொடூர செயல் 'இந்தியனைவிட சிங்களனே மேல்' என கூறும் அளவுக்கு உள்ளது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வன்னியில் வதை முகாம்களில் சிக்கி சிதைந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கடந்த மாதம் சுமார் 884 டன் எடை கொண்ட உணவு மற்றும் மருந்து பொருட்களை கேப்டன் அலி என்ற வணங்காமண் கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த கப்பலை ஈவு இரக்கம் இல்லாத சிங்கள இனவெறியர்கள் அனுமதிக்கவில்லை. இரண்டு மாதமாக அந்த கப்பல் ஓர் அகதியை போல நடுக்கடலில் தத்தளிக்கிறது. தவிக்கிறது. அதில் பணியாற்றும் ஊழியர்கள் நோய்வாய் பட்டு சிகிச்சை பெற வழியின்றி துயரப்படுகின்றனர்.
இந்த பொருட்களை சென்னை துறைமுகத்தில் அனுமதி அளிக்காமல் இந்திய அரசு ஈரம் இல்லாத அரக்கத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. அதை விடுதலை சிறுத்தைகளிடம் ஒப்படைத்து, தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகளுக்கு கொடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் முயற்சிகள் மேற்கொண்டது.
ஆனால், அதிகாரிகள் அந்த கப்பலை வெளியேறும்படி எச்சரித்துள்ளனர். இந்திய அரசின் கொடூர போக்கு இந்தியனைவிட சிங்களனே மேல் என கூறும் அளவுக்கு உள்ளது. இந்திய அரசின் தமிழின விரோத, மனித நேயமற்ற போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் திருமாவளவன்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications