காங்.க்கு தமிழகத்தை ஆளும் தகுதி உண்டு-தங்கபாலு
சென்னை: தமிழகத்தில் தனித்து ஆட்சி செய்யும் தகுதி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் இன்று உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து அவர் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் இன்று துவக்கப்பட்டுள்ளது. ஒரு உறுப்பினர் 25 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 3 மாதத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்தவுடன் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக உட்கட்சி தேர்தல் நடைபெறும். உட்கட்சி தேர்தலுக்கான அட்டவணையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிக்கும். இந்தத் தேர்தலில் இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இளைஞர்கள் அதிக அளவில் ஈர்க்கப்படுவார்கள். உட்கட்சி தேர்தலில் அனைத்து தலைவர்களும் ஓரணியில் நின்று, 1996ல் எப்படி தேர்தல் நடத்தினோமோ அதன் அடிப்படையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும்.
ராகுல் காந்தி தனக்கு வந்த அமைச்சர் பதவியை உதறி விட்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஆட்சி செய்துள்ளது. எங்களுக்கு ஆட்சி செய்யும் தகுதி உள்ளது. தனித்து ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். எங்களுடைய லட்சியமும் அதுதான். இந்த இலக்கை நோக்கித்தான் இனி எங்களின் பயணம் தொடரும்.
கச்சத் தீவு சர்வதேச பிரச்சனை என்பதால் மத்திய அரசு எடுக்கும் நிலைதான் தமிழக காங்கிரசின் நிலையாகும். பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறு. அப்படி எந்த அனுமதியும் தரப்படவில்லை என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
என்.எல்.சி. பங்கு விற்பனை விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றார் தஙகபாலு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications