ஐஐடி-தகுதியான எஸ்சி, பிசி மாணவர்கள் கிடைக்கலையாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள 17 ஐஐடிக்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கோட்டாவில் சேர்க்க தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி 1,100 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நிரப்பாமலேயே இந்த ஆண்டு மாணவர் சேர்கைகயை முடித்துக் கொண்டுள்ளன ஐஐடி நிர்வாகங்கள்.

அதே போல 53 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களில் சேர்க்கவும் தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லையாம்!. இதனால் இந்த இடங்கள் பொதுக் கோட்டாவுக்கு மாற்றப்படவுள்ளன.

இந்த வகுப்புகளில் சேர அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதியை பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் பெறவில்லையாம்.

இதனால் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கான இடங்களை ஆயத்த இடங்களாக மாற்றவுள்ளார்களாம்.

இதற்காக இந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்-ஆப் மதிப்பெண்களைக் குறைத்து அவர்களை ஆயத்த வகுப்புகளுக்கு தேர்வு செய்து, ஓராண்டு காலம் இந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பார்களாம்.

பின்னர் தேர்வு வைக்கப்பட்டு அதில் வெற்றி பெறும் மாணவர்கள் ஐஐடியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களாம். இதனால் இவர்கள் மற்ற மாணவர்களைவிட ஓராண்டு பின்தங்கிப் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐஐடிக்களில் உள்ள 8,295 இடங்களில் சேர மொத்தம் 3,84,977 பேர் தேர்வெழுதினர். இதில் 10,035 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+