காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறப்பு இல்லை-கர்நாடகம்
பெங்களூர்: காவிரி பாசனப் பகுதியில் உள்ள அணைக்கட்டுகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் இப்போதைக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்று அம் மாநில முதல்வர் எதியூரப்பா கூறினார்.
காவிரி நீர்ப்பாசன கழகம், கர்நாடக நீர்ப்பாசன கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை இன்னும் பெய்யவில்லை. இதனால் காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைக்கட்டுகளில் நாளுக்கு நாள் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் குடிநீர்ப் பிரச்னையை சமாளிப்பதே கஷ்டமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தற்போது காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை. நல்ல மழை பெய்து அணைக்கட்டுகள் நிரம்பும் நிலை ஏற்படும்போது தமிழகத்துக்கு எப்போதும்போல் தண்ணீர் திறந்துவிடப்படும்.
இந்தப் பிரச்னையில் கர்நாடகத்தின் நலனை அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. அதுபோன்ற ஒரு முடிவை அரசு எடுக்காது. அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லை, இதனால் தமிழகத்துக்குத் தண்ணீர் விடவில்லை என்றார்.
தமிழகம் வலியுறுத்தவில்லை...
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை,
தண்ணீரைத் திறந்துவிடும்படி தமிழக அரசிடமிருந்து கர்நாடகத்துக்கு கடிதம் ஏதும் வரவில்லை. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை.
காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியமும் இல்லை. ஜூலையில் நல்ல மழை பெய்தால் குறிப்பிட்டபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.
தமிழகம் வலியுறுத்தவில்லை...
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை,
தண்ணீரைத் திறந்துவிடும்படி தமிழக அரசிடமிருந்து கர்நாடகத்துக்கு கடிதம் ஏதும் வரவில்லை. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை.
காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியமும் இல்லை. ஜூலையில் நல்ல மழை பெய்தால் குறிப்பிட்டபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.
வறளும் மேட்டூர்..கவலையி்ல் விவசாயிகள்:
இதற்கிடையே மேட்டூ்ர் அணையின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ஜூலையில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கான நீர் திறந்து விடுவது சந்தேகமாகியுள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications