சென்னை-மதுரை-திருச்சி: ரூ1000 கோடியி்ல் சாலைகள்

உள்ளாட்சி்த் துறை தொடர்பான கொள்கை குறிப்புகளை தாக்கல் செய்து அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டு மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேர் நகர்ப் பகுதிகளில் வசிக்கிறார்கள். எனவே நகரங்களில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இந்த அரசின் முக்கிய குறிக்கோளாகும்.
வரும் 20 ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து நகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை தங்க சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க ரூ.26 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. டர்ன்புல்ஸ் சாலை- செனடாப் சாலை சந்திப்பில் கட்டப்படும் மேம்பாலம் பணி டிசம்பர் மாதம் முடிவடையும். வட சென்னையில் கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதை மீது ரூ.61 கோடியில் மேம்பலம் கட்டப்படும்.
தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையை நவீனப்படுத்த ரூ.13 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கில் நடைபாதை ஓரங்களில் கருங்கல் தூண்களுடன் துருப் பிடிக்காத ஸ்டீல் பைப்புகளால் ஆன கைப்பிடிகள் அமைக்கப்படுகின்றன.
கடற்கரை பகுதியில் பொதுமக்கள் அமர அழகான மேடைகள், பூங்காக்கள் ரூ.28 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை பகுதியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை மெரீனா கடற்கரையை உள்ளடக்கிய பகுதியில் பெரிய அளவில் அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் அதி விரைவு சுற்று வட்ட போக்குவரத்து பாதை அமைக்க திட்டறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 2012க்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளன.
களப்பணி வேலைகள் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 11ம் தேதி துவக்கி வைக்கப் பட்டது. இத் திட்டத்தின் 2ம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும்.
நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உலகத் தரத்துடனான சாலைகள் அமைக்க ரூ. 1,000 கோடியி்ல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் முதல் கட்டமாக சென்னை, மதுரை, திருச்சியில் அமலாக்கப்படும் என்றார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications